பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரபாஸின் 'சாஹோ' - ரிலீஸ் தேதி அறிவிப்பு !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ.  இந்த படத்தை 'ரன் ராஜா ரன்' படத்தின் இயக்குநர் சுஜித் இயக்க யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

Actor Prabhas and Shraddha Kapoor's Saaho release date announced

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்க,  அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ் ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.