நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘எங்க ஏரியா எங்களுது’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். பூனம் பாஜ்வா, எம்ஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எங்க ஏரியா எங்களுது’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாபா பாஸ்கர் நடனம் அமைத்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் தாறுமாறாக ஆடி அசத்தியுள்ளார்.
ஒரு சமூகத்தின் குரலாக உருவாகியுள்ள இப்படத்தில், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியல், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான போராட்டங்களை பற்றிய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்ரல்.5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.
எங்க ஏரியா எங்களுது- ஜி.வி.பிரகாஷின் தர லோக்கல் ராப் சாங் வீடியோ வீடியோ