நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். பூனம் பாஜ்வா, எம்ஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் சில நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் ஜி.வி.பிரகாஷ்-யோகி பாபு இடையிலான காமெடி சீன்களும் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்ரல்.5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.
காத்தாடி, கமலா எல்லாம் போச்சு மச்சான் - வருந்தும் ஜி.வி.பிரகாஷின் ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ