காஞ்சனா 3 டிரைலரை பாராட்டிய பிரபலம் - மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் நடிகர் ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

Kalanithi Maran appreciated Raghava Lawrence for Kanchana 3 trailer in person

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

அதன் வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் விறுவிறுப்பான திகில் காட்சிகளுடன் கூடிய டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த டிரைலரை பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டபுள் மாஸாக ஹாரர்-காமெடியில் உருவாகியுள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

காஞ்சனா 3 டிரைலரை பாராட்டிய பிரபலம் - மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் வீடியோ