திருநங்கைகளுக்காக லாரன்ஸ் எடுத்திருக்கும் புது முயற்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆதரவற்ற திருநங்கைகளுக்காக வீடு கட்டித் தருவதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 1.25 கிரவுண்ட் நிலத்தை வழங்கியுள்ளார்.

Raghava Lawrence donates land to transgenders home at Kanchana 3 audio launch

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

அதன் வரிசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை தவிற்குமாறு சன் டிவி-யிடம் கேட்டுக் கொண்ட ராகவா லாரன்ஸ், இசை வெளியீட்டிற்கு செல்வாகும் தொகையை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் வசிக்கும் வகையில் வீடுகள் கட்டித் தர ராகவா லாரன்ஸ் எடுத்துள்ள இம்முயற்சிக்கு, மக்களும் உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.