காருக்குள் கசமுசா- 90ML முத்தக் காட்சி குறித்து ஹீரோ ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா நடிப்பில் வெளியாகியுள்ள 90ML திரைப்படத்தில் இடம்பெற்ற நெருக்கமான முத்தக் காட்சி குறித்து நடிகர் தேஜ் ராஜ் பகிர்ந்துள்ளார்.

Oviya's 90ML actor Tej Raj opens up about intimate car scene

அனிதா உதீப் இயக்கிய  90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் வெளியானது.  நடிகர் சிம்பு இசையமைத்து, கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பொம்மு லக்ஷ்மி, ஸ்ரீ கோபிகா, மோனிஷா ஆகியோர் ஓவியாவின் தோழிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தில் பெண்கள் செய்யும் பல விஷயங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கடும் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் இப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தேஜ் ராஜ், 90ML படத்தில் நடித்த அனுபவம் குறித்து Behindwoods தளத்திடம் பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், இப்படம்  அடல்ட் திரைப்படம் என இயக்குநர் ஆரம்பத்திலேயே தெளிவாக கூறிவிட்டார், படத்தில் முத்தக் காட்சிகள் நெருக்கமான காதல் காட்சிகள் இருப்பதையும் கூறிவிட்டார். படம் வெளியான பிறகு குற்றம் சொல்லக் கூடாது பிடிக்காவிட்டால் வீட்டிற்கு செல்லலாம் என கூறிவிட்டார். பின், இது குறித்து அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன், அவர் சம்மதம் கூறிய பிறகு நடிக்க வந்தேன் என்றார். தேஜ் ராஜின் பிரபல நடிகர் சரண் ராஜின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பேசிய அவர் படத்தில் முக்கியமான காட்சியாக அமைந்த காருக்குள் வரும் முத்தக்காட்சியில் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால், இரண்டே டேக்கில் முடித்துவிட்டோம் என்றார். ஓவியாவை முதன்முறையாக பார்த்தபோது, அவரை ஒரு பிரபலமாக கருதினேன், பின் நடிக்க ஆரம்பித்ததும், அவர் மிகவும் எதார்த்தமாக பழகினார் என்றார்.

90ML திரைப்படத்திற்கு முன்பே தனக்கு அடல்ட் காமெடி கதைகளில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததாகவும், வேறு நல்ல கதைகளுக்காக காத்திருப்பதாகவும் தேஜ் ராஜ் தெரிவித்தார்.

காருக்குள் கசமுசா- 90ML முத்தக் காட்சி குறித்து ஹீரோ ஓபன் டாக் வீடியோ