ஒரே படத்தில் இணையும் கோலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டைலிஷ் வில்லன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘இரும்புத்திரை’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Action King Arjun to play Villain in Arvind Swamy's film

‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் அரவிந்த்சாமி, ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இருவரும், கடந்த 2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்திலும் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எட்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் மீண்டும் அரவிந்த் சாமி, அர்ஜுன் இணைந்து நடிக்கின்றனர். தற்போது அரவிந்த்சாமி நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’, ‘கள்ளப்பார்ட்’ அகிய திரைப்படங்கள் கைவசம் உள்ளன.