விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' டீஸர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியும் இயக்குநர் அருண்குமாரும் இணையும் படம் 'சிந்துபாத்'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Vijay sethupathi and Anjali's Sindhubaadh teaser released

'இறைவி' படத்துக்கு பிறகு இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்த படத்தின் டீஸர்  தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீஸரில் வழக்கம் போல விஜய் சேதுபதியின் குரல் மிகுந்த உணர்வுப் பூர்வமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவரது மகன் சூர்யாவும் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி, ஃபஹத்  பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' டீஸர் இதோ! வீடியோ