காமசூத்ரா ஏன்?-ரகசியம் சொல்லும் சூப்பர் டீலக்ஸ் பாய்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற காமசூத்ரா வசனம் குறித்த ரகசியத்தை சூப்பர் டீலக்ஸ் பாய்ஸ் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

Why Kamasutra in Vijay Sethupathi's Super Deluxe? Real reason revealed by Super Deluxe Boys

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, ஃபகத் ஃபாசில், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி குரலில் வரும் வசனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

இந்த டிரைலரில் நடித்திருந்த ஒரு சில இளைஞர்கள் Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய அவர்கள் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டனர். அவர்கள் பேசுகையில், தியாகராஜன் குமாரராஜாவிடம் சினிமா பாடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தின் டிரைலரில் ஒருவர் அதிர்ச்சியான ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு காமசூத்ரா என்ற வசனத்தை கூறுவார். அது குறித்து கேட்டபோது, வாவ் என்பது போல் வித்தியாசமாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்பினார். அப்போது விளையாட்டாக சொன்னது இந்த காமசூத்ரா என்ற வார்த்தை அதையே ஓகே செய்துவிட்டார் என்றனர்.

ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்பட்ம வரும் மார்ச்.29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

காமசூத்ரா ஏன்?-ரகசியம் சொல்லும் சூப்பர் டீலக்ஸ் பாய்ஸ் வீடியோ