பூஜையுடன் தொடங்கிய மக்கள் செல்வனின் அடுத்த படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Vijay Sethupathi-Vijay Chander film kicks starts with Pooja

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விவேக்-மெர்வின் இணை இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.