அசர வைக்கும் தீபிகாவின் அழகு- புதிய கெட்டப்பிற்கு குவியும் பாராட்டுகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Deepika Padukone reveals her look in Chhapaak, story of acid attack survivor Laxmi Agarwal

கடந்த ஆண்டு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘பத்மாவத்’ எனும் சரித்திர கால திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆலியா பட் நடித்த ‘ராஸி’ திரைப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கும் புதிய படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

‘சபாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆசிட் வீச்சு எனும் கொடூர தாக்குதலுக்கு ஆளான டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகவுள்ளது.

இதில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்து போன லக்ஷ்மியின் கேரக்டரில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்காக தீபிகா படுகோன் எடுத்துள்ள முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆசிட் வீச்சால் சிதைந்து போன முகம் போன்ற லுக்கில் தீபிகா படுகோன் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களையும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தனது 15வயதில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் தனது 15 வயதில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர் லக்ஷ்மி அகர்வால். இந்த சம்பவத்தினால் வாழ்க்கையில் பெரும் சங்கடங்களை சந்தித்த லக்ஷ்மி, தன்னை போல் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மேமாப்பாட்டிற்காக தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இப்படத்தில் விக்ராந்த் மாஸி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷங்கர்-இஷான் - லாய் இசையமைக்கும் இப்படத்திற்கு மைக்கேல் லூகா ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் வரும் 2020-ல் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.