பிரச்சாரமா? தேர்தலில் இப்படி இருக்க தான் விருப்பம் - கார்த்தி விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக வெளியான வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Actor Karthi clarifies on rumours of campaigning for a political party

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை தயார் செய்வது, வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக சில தகவல்கள் உலவுகின்றன. அது முற்றிலும் தவறான தகவல். தேர்ததில் ஒரு வாக்களராக மட்டுமே கலந்துக் கொள்ள விரும்புகிறேன் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கார்த்தில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கைதி’, ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘கார்த்தி 19’ திரைப்படம் உள்ளிட்டவை கைவசம் உள்ளன. கார்த்தி 19 திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ ஹீரோயின் ராஷ்மிகா மண்டனா தமிழில் அறிமுகமாகிறார்.