தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் - சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கோலாகலமாக சென்னையில் நேற்று நடைபெற்றது.

நடிகர் பார்த்திபனின் மகள் அபிநயாவிற்கும், பழம்பெரும் நடிகர் ‘நடிகவேல்’ எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகள் வழி பேரனுமான நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் நேற்று (மார்ச்.24) சென்னையில் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக நடிகர் பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனாவிற்கு கடந்த ஆண்டு மார்ச்-8ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர், பிரபல திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும், இயக்குநருமான அக்ஷய் என்பரை திருமணம் செய்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தற்போது மூத்த மகள் அபிநயாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமண விழாவிற்கு நடிகர் ராதா ரவி , லதாரஜினிகாந்த், R .B சௌத்ரி ,இயக்குனர் எழில் , லேனா தமிழ் வாணன் , A .P ஸ்ரீதர் , SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர் , மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் , ஈஸ்வரி ராவ் , DTR ராஜா , அட்வகேட் ராஜசேகர் , நிரோஷா , சாந்தனு பாக்யராஜ் ,கீர்த்தி சாந்தனு, நடிகர் கார்த்தி , இயக்குனர் விக்ரமன் , மயில் சாமி , மோகன்,சித்ரா லக்ஷ்மணன் ,ஐக் ஹரி ,தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார் , R பாண்டியராஜன் , பிரித்திவிராஜன், JSK சதிஷ் ,பானு ப்ரியா , ,நல்லி குப்புசாமி செட்டியார் , சூரி , ஒளிப்பதிவாளர் சுகுமாரன் , சத்யஜோதி தியாகராஜன் , நடிகை அருணா , இயக்குனர் KS ரவிக்குமார் , நடிகை சாரதா , ராஜ ஸ்ரீ , சச்சு , வெந்நீராடை நிர்மலா போன்ற திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.