www.garudabazaar.com

"Title அடிக்குற எண்ணம் இல்லையா..? " .. மைனாவிடம் கேள்விகளை அடுக்கிய விஜே பார்வதி.! bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

vj parvathi quesions to myna nandhini bigg boss 6 tamil

Also Read | விஜய் -யின் ‘வாரிசு’ -ல மகேஷ் பாபு -வின் ‘மகரிஷி’ பட தாக்கம் இருக்கா? - வம்சி Open பதில்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்கள் வந்து போகின்றனர். முன்னதாக சுரேஷ் சக்ரவர்த்தி இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருந்தார். இந்நிலையில் பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இதில் விஜே பார்வதி, “நீங்கள் இந்த வீட்டில் என்ன செய்கிறீர்கள். உங்கள் காமெடிகளுக்கு மற்றவர்கள் சிரிக்கிறார்கள் அல்லது என்ஜாய் பண்ணுகிறார்கள் என நினைக்கிறீர்களா..

இந்த வீட்டில் மைனாவே தெரியல.. அது ஏன்? டைட்டில் வின் பண்ணும் எண்ணம் இல்லையா..?  நான் பாட்டுக்கு இருக்கிறேன், போவேன் என இருக்கிறீர்களா.?” என அடுக்கடுக்காக மைனாவை ஒன் டு ஒன் கேள்வியாக கேட்கிறார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது.

Also Read | Varisu : வாரிசு Trailer -அ தாண்டி உள்ள இருக்குற சீக்ரெட்ஸ்.. உடைத்த வம்சி.! Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

vj parvathi quesions to myna nandhini bigg boss 6 tamil

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, VJ Parvathi, Vj shobana will find this news story useful.