www.garudabazaar.com

விக்ரமன் பற்றிய மீம்.. பார்த்ததும் விழுந்து சிரிச்சிட்டாரு.. இன்றைய பிக்பாசில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Vikraman Laughing after saw meme about him in biggboss

Also Read | "மிக்க நன்றி நண்பா, இதனால தான் நீங்க தளபதி".. தமிழில் தெறிக்கும் ஷாருக்கானின் ட்வீட்!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikraman Laughing after saw meme about him in biggboss

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Vikraman Laughing after saw meme about him in biggboss

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது.

இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வீட்டுக்குள் வந்திருக்கும் விஜே பார்வதி மற்றும் Behindwoods-ன் விஜே ஷோபனா ஆகியோர் போட்டியாளர்களை நேர்காணல் செய்கின்றனர். அப்போது அமுதவாணனிடம் பேசும் விஜே ஷோபனா," கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் விளையாட ஆரம்பிச்சிட்டீங்க. ஏன் இடையில எமோஷனுக்கு இடம்கொடுத்தீங்க?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

Vikraman Laughing after saw meme about him in biggboss

இதற்கு பதில் அளிக்கும் அமுதவாணன்,"மற்ற விஷயங்களை விடுங்க. ஜனனி விஷயத்தை கிளியர் பண்ணுங்க. மக்கள் சார்பா தான் நான் கேக்குறேன்" என்கிறார். தொடர்ந்து விக்ரமனிடம் பேசும் பார்வதி,"தான் அரசியல் சார்ந்து இருப்பதாலேயே ஒரு ஹெட் மாஸ்டர் பிஹேவியர் உங்ககிட்ட இருக்கு. என்ன சொல்றிங்க?" எனக் கேட்கிறார். தொடர்ந்து அங்கிருக்கும் திரையில் விக்ரமன் பற்றிய மீம் ஒன்றும் திரையிடப்படுகிறது. அதில்,"ஒன்னு தூங்க வேண்டியது, இல்லைன்னா கொற சொல்ல வேண்டியது" என குறிப்பிடப்பட்டு அதற்கு தகுந்தாற்போல புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Vikraman Laughing after saw meme about him in biggboss

இதை கண்ட விக்ரமன் 'ஐயையோ' என சிரிக்க, "இது ஒரு சீரியஸ் நோட்டும் கூட" என்கிறார் பார்வதி. இப்படி அதிரடி திருப்பங்களுடன் நிகழ இருக்கிறது இன்றைய பிக்பாஸ்.

Also Read | "Title அடிக்குற எண்ணம் இல்லையா..? " .. மைனாவிடம் கேள்விகளை அடுக்கிய விஜே பார்வதி.! bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Laughing after saw meme about him in biggboss

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.