www.garudabazaar.com

விஜய் -யின் ‘வாரிசு’ -ல மகேஷ் பாபு -வின் ‘மகரிஷி’ பட தாக்கம் இருக்கா? - வம்சி Open பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

Vamshi on Vijay varisu and maharishi mahesh babu

Also Read | Kantara : போடு! ஆஸ்கர் விருது பரிந்துரை போட்டியில் சம்பவம் செய்த ‘காந்தாரா’.. குவியும் பாராட்டு..

வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vamshi on Vijay varisu and maharishi mahesh babu

சமீபத்தில்  வெளியான வாரிசு பட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக அளித்துள்ளார்.  முன்னதாக “வாரிசு படத்தில் மகரிஷி படத்தின் தாக்கம் இருக்கோனு ரசிகர்களிடத்தில் பேச்சு போகுது, இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?” என கேட்கப்பட்டது.

Vamshi on Vijay varisu and maharishi mahesh babu

இதற்கு பதில் அளித்த வம்சி பைடிபள்ளி, “மகரிஷி படத்துக்கும் வாரிசுவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் மகரிஷியும் என்னோட குழந்தை தானே? (என் படம் தானே?) அதனால் என் குழந்தையின் தாக்கம் என் இன்னொரு குழந்தை மீது இருக்கும். ஆனாலும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான லுக், ஜானரில் இருக்கும். ஆனால் அது இந்த படத்துக்கும், இந்த கேரக்டருக்கும் என்ன தேவையோ அதை பற்றி யோசித்து வைப்பதுதான், முந்தைய படங்களை கம்பேர் பண்ணினாலும் நான் தவறாக எண்ண மாட்டேன்.

Vamshi on Vijay varisu and maharishi mahesh babu

ஏனென்றால் அதுவும் என் படம் தான். தெரிந்தோ தெரியாமலோ சில சமயங்களில் முந்தைய பயணங்கள் அடுத்த பயணத்தில் பிரதிபலிக்கும், அது சப் கான்சியஸில் இல்லை. ஆனால் இது அந்த படத்தில் பார்த்ததுப்பா என மற்றவர்களுக்கு தோனலாம். ஆனால் அதை பற்றிய யோசனை என்னிடம் இல்லை. இந்த படம் என்ன கேட்கிறது, இந்த படத்துக்கு வொர்க் ஆகுதா? இந்த படத்தின் போஸ்டர், லுக் எல்லாமே அப்படி யோசிப்பதுதான். ரொம்பவும் உள்ளே போய் அப்படி யோசிப்பதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Varisu : வாரிசு Trailer -அ தாண்டி உள்ள இருக்குற சீக்ரெட்ஸ்.. உடைத்த வம்சி.! Exclusive

விஜய் -யின் ‘வாரிசு’ -ல மகேஷ் பாபு -வின் ‘மகரிஷி’ பட தாக்கம் இருக்கா? - வம்சி OPEN பதில் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vamshi on Vijay varisu and maharishi mahesh babu

People looking for online information on Vamshi Paidipally, Varisu, Vijay will find this news story useful.