"IPLல நல்லா விளையாடிட்டா போதுமா???... அதுக்காக இதெல்லாம் ரொம்ப தப்பு!"... 'புது சர்ச்சையை கிளப்பியுள்ள முன்னாள் வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணித்தேர்வு குறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில் அதற்கான 3 அணிகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. இதையடுத்து ஐபிஎல் செயல்திறனை மட்டும் வைத்து கேஎல் ராகுலை டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுத்துள்ளது தவறான முன்னுதாரணம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த தொடரின் 3 அணியிலும் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேஎல் ராகுல் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளது குறித்தும் சஞ்சய் மஞ்ச்ரேகர் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்ச்ரேகர், "ஐபிஎல் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வீரரை முக்கிய டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுத்துள்ளது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் அவர் சரியாக விளையாடாத நிலையில், அவரை தேர்ந்தெடுத்துள்ளது ரஞ்சி வீரர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது அதிர்ஷ்டம். அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
