30 நிமிஷம்.. கடற்கரை வெயிலில் தூங்கிய பெண்.. "எந்திரிச்சு கண்ணாடி'ல மூஞ்ச பாத்ததுக்கு அப்புறம்".. ஒரு கணம் அப்படியே ஆடி போய்ட்டாங்க
முகப்பு > செய்திகள் > உலகம்கடற்கரையில் சுமார் 30 நிமிடம் வெயிலில் உறங்கிய பெண்ணின் நெற்றியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பான செய்தி, பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது.
லண்டனை சேர்ந்த அழகு கலைஞரான சிரின் முராத் என்ற 25 வயது பெண் ஒருவர், தனது விடுமுறையை கழிப்பதற்காக பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியிலுள்ள கடற்கரை ஒன்றில், சுமார் 21 டிகிரி செல்சியஸ் வெயிலில், ஒரு 30 நிமிடங்கள் உறங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, எழுந்து பார்த்த சிரினுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவரது முகம் முழுவதும் சிவந்து புண் போல தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிரின், அன்றைய விடுமுறை நாளை நல்லபடி கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், மறுநாள் காலையில் எழுந்து சிரின் பார்த்த போது, அடுத்த ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.
அவரது முகத்தில் ஏதோ இறுக்கி பிடித்தது போல உணர்ந்த நிலையில், தனது நெற்றிப் பகுதியில் கை வைத்து பார்த்த போது, பிளாஸ்டிக் இருப்பது போல தோன்றியுள்ளது. இதனால், பயந்து போன அவர், உடனடியாக தனது குடும்பத்தரிடம் இது பற்றி கூறி உள்ளார். இதன் பின்னர், பிளாஸ்டிக் போல இருந்த தோலும் உரிய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மருத்துவர்கள் யாரையும் சிரின் அணுகவில்லை என கூறப்படும் நிலையில், ஆரம்பத்தில் இந்த தோல் பிரச்சனை தனக்கு வலியை கொடுத்ததாகவும், பின்னர் நாட்கள் செல்ல செல்ல தோல் உரிய தொடங்கியது, தனக்கு நல்ல உணர்வை கொடுத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், 7 வாரங்களாக அவரது முகத்தின் தோல் இப்படியே இருந்துள்ளது. தற்போது கன்னங்கள் மற்றும் கண்கள் அருகே மட்டும் சில தோல் பிரச்சனைகள் இருக்கிறது. அதுவும், விரைவில் குணமாகி விடும் என சிரின் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சிரின் மேலும் பேசுகையில், "உங்கள் தோல் நன்றாக இருக்கிறது. சருமத்திற்கு ஒன்றும் ஆகாது என நீங்கள் நினைத்தால், அது தவறு. உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். நான் வழக்கமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவேன். ஆனால், அன்று சன் ஸ்க்ரீன் பயன்படுத்த மறந்து விட்டேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தான் தற்போது இந்த தகவலை பகிர்ந்ததாக சிரின் தெரிவித்துள்ளார். 21 டிகிரி செல்சியஸ் வெயிலில் படுத்துக் கிடந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.