இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா??.. உலகையே திரும்பி பார்க்க வைத்த பெண்.. 106 நாட்கள் தொடர்ந்து செய்த 'அசாத்திய' விஷயம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 11, 2022 11:54 PM

கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த விளங்கும் நபர்கள், அந்த துறைகளில் ஏதாவது வித்தியாசமாக ஒரு சாதனை படைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

woman runs 106 marathons for 106 days creates guinness record

உதாரணத்திற்கு நீச்சல் என்று எடுத்துக் கொண்டால், அதில் அசத்தும் ஒருவர், இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை நீச்சலில் செய்ய வேண்டும் என முயற்சி மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயதான கேட் ஜைடன் என்ற பெண் ஒருவர், தற்போது படைத்துள்ள கின்னஸ் உலக சாதனை ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தடகள வீராங்கனை கேட் ஜைடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல், தினமும் மராத்தான் ஓட தொடங்கி உள்ளார். அதன்படி, தினமும் சுமார் 42 கிலோமீட்டர் ஓடி தன்னுடைய மராத்தானை இவர் முடித்து வந்துள்ளார்.

அதன்படி, கடந்த டிசம்பர் 31 முதல், இந்தாண்டு ஏப்ரல் 15 வரை தினமும் 42 கிலோ மீட்டர் மராத்தான் என மொத்தம் 106 நாட்கள் ஓடி முடித்துள்ளார் கேட். அகதிகளுக்கான நிதி சேகரிப்பிற்காகவும், அது தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகவும் இந்த மராத்தான் ஓட்டத்தை கேட் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், 106 நாட்கள் மாரத்தான் மூலம், சுமார் 41 லட்ச ரூபாய் நிதியையும் அவர் சேகரித்துள்ளார். நிதிக்காக தொடங்கப்பட்ட மாரத்தான், மக்கள் மற்றும் ஊடங்கங்களில் அதிக கவனத்தை பெற, சாதனைக்காகவும் கேட் விண்ணப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 106 நாட்கள் தொடர் மராத்தான் என்பது கின்னஸ் சாதனையாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், அதே வேளையில், கேட் ஜைடனின் இந்த சாதனை ஓட்டத்திற்கு பின், கடுமையான துயரம் ஒன்றும் உள்ளது. அதாவது, தொடர்ந்து 46 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல், கேட் மாரத்தான் ஓடி வந்த நிலையில், அதன் பின்னர் அவரது கால்கள் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனையை அவர் அணுகிய போது, அவரது முட்டியில் உள்ள எலும்பு பகுதியில் லேசான முறிவு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இருந்த போதும், விழிப்புணர்வு மற்றும் நிதி சேகரிப்பிற்காக இந்த மாரத்தான் ஓட்டத்தை முறிந்த எலும்புகளுடனும் 106 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளார் கேட் ஜைடன். இப்படி ஒரு மகத்தான சாதனையை படைத்த கேட் ஜைடனை பொது மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #GUINNESS RECORD #MARATHON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman runs 106 marathons for 106 days creates guinness record | World News.