அட்ரா சக்க..! "இப்படி ஒரு ரூட்ல" CSK'வுக்கு திரும்புகிறாரா டு பிளெஸ்ஸிஸ்??.. குஷியில் ரசிகர்கள்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானதாகும்.
இதில் ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கென்று ஏராளமான ரசிகர்கள் இந்தியாவை கடந்து, பல நாடுகளிலும் உள்ளனர்.
அப்படிப்பட்ட ஒரு அணிகளில், பல ஆண்டுகளாக ஆடி வந்த தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ், இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில், பெங்களூர் அணி வாங்கி கேப்டனாகவும் அவரை நியமித்திருந்தது. பெங்களூர் அணிக்காக டு பிளெஸ்ஸிஸ் ஆடி வந்தாலும், சென்னை ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவை அளித்து தான் வருகின்றனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில், மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாக பாப் ஆடவுள்ளது பற்றிய தகவல், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, தென் ஆப்பிரிக்காவிலும் டி20 லீக் போட்டி கிரிக்கெட் போட்டி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் முதல் சீசன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தான் வாங்கி உள்ளனர். அந்த வகையில், ஜோகன்ஸ்பர்க்கை அடிப்படையாகக் கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இந்த அணிக்கு ஜோகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், தென் ஆப்ரிக்க டி20 லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸின் ஜோகன்ஸ்பர்க் அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ்ஸை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை அணியில் இருந்து அவர் வெளியேறினாலும், தென் ஆப்பிரிக்காவின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் ஆட உள்ளதாக வலம் வரும் தகவல், சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதே போல, சென்னை அணிக்காக ஆடி வரும் வேறு சில வெளிநாட்டு வீரர்களையும் ஜோகன்ஸ்பர்க் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில், ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ள ஆறு அணிகளும் முதல் 5 வீரர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான், டு பிளெஸ்ஸிஸ்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எடுத்துள்ளதாக தகவல்கள் வலம் வருகிறது.