கொரோனாவ விட 'கொடிய' நோய்... எங்க 'நாட்டு'ல பரவுதா?.... 'சீனா' பொய் சொல்லுது,,, அத நம்பாதீங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்சீன நாடுகளில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதிக்குது வருகிறது. பல நாடுகளில் வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
![Kazakhstan denies china statement on deadly pneumonia corona Kazakhstan denies china statement on deadly pneumonia corona](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/kazakhstan-denies-china-statement-on-deadly-pneumonia-corona.jpg)
இந்நிலையில், மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அங்கு அமைந்துள்ள சீன தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 1700 பேர் வரை உயிரிழந்ததாகவும் சீனா தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால், கஜகஸ்தானில் உள்ள சீன மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் சீன தூதரகம் எச்சரித்துள்ளது.
சீன தூதரகத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கஜகஸ்தான் சுகாதார அமைச்சகம் கருத்து வெளியிட்டுள்ளது. கொரோனா அல்லாத வேறொரு நோய் மூலம் அங்கு உயிரிழப்புகள் குறித்து சரியான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை என தெரிவித்துள்ளது. 'சீன தூதரகம் அறிவித்துள்ள தகவல் தவறானது. அவர்களின் இறப்புக்கு நிமோனியா தான் காரணம் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சில நேரம், கொரோனா கிருமி கூட அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். நிமோனியா காய்ச்சல் கஜகஸ்தானில் அதிகம் பரவுவதாக சீன ஊடகங்கள் வெளியிட்ட தகவலில் உண்மையில்லை' என தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று மூலம் கஜகஸ்தான் நாட்டில் இதுவரை சுமார் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)