"நீங்களா இத செஞ்சீங்க???"...'பாத்ரூம் கண்ணாடிக்குள் இருந்த மொபைல்'... '6 வருசமா எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணியிருக்காரு'... நொறுங்கி போன இளம்பெண்!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 13, 2020 04:19 PM

சிலருக்கு நாம் சாதாரணமாகக் கொடுக்கும் மரியாதையைத் தாண்டி மனதில் பெரும் அன்பும், பெரும் மதிப்பும் இருக்கும். ஆனால் அதைத் தகர்ப்பதைப் போன்று ஒரு நிகழ்வு நடந்தால் அதை யாராலும்  ஏற்றுக் கொள்ள முடியாது.

Young girl discovers stepdad secretly filmed her in bath for five year

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Lauren Brightwood என்பவர் குளிப்பதற்காகத் தனது குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அங்குக் குளிப்பதற்காகத் தனது ஆடைகளை வைத்து விட்டுக் குளிக்கத் தயாரானபோது குளியல் அறையின் கண்ணாடியின் பின்புறம் ஏதோ மொபைல் போன்று இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். பின்னர் அந்த மொபைலை எடுத்துப் பார்த்தபோது ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதில் Lauren குளிப்பதற்காக உள்ளே வந்ததிலிருந்து, குளிக்கத் தயாரானது வரை அனைத்து காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தது.

Young girl discovers stepdad secretly filmed her in bath for five year

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அந்த மொபைல் போன் யாரோடது என தெரிந்ததும் மீண்டும் அதிர்ச்சியில் உடைந்து போனார். உடனே தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய Lauren, அதில் ''உடனே குளியல் அறைக்கு வாருங்கள் எனத் தெரிவித்ததோடு, Craigக்கு தெரியாமல் வாருங்கள்'' என அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார். உடனே தாய் பதறி அடித்துக்கொண்டு குளியல் அறைக்கு ஓடி வந்தார். அங்கு வந்த அவர் அந்த மொபைலை சோதித்துப் பார்த்தார். அப்போது தான் அந்த மொபைல் Craigவின் மொபைல் என தெரிய வந்தது. Craig  வேறு யாரும் அல்ல. இளம்பெண் Laurenவின் தாயின் கணவர்.

Young girl discovers stepdad secretly filmed her in bath for five year

அதாவது Lauren அவருடைய வளர்ப்பு மகள். Laurenயை அவர் 4 வயதிலிருந்து வளர்த்து வந்துள்ளார். உடனே இந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தார்கள். உடனே மொபைலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. Laurenயின் 13 வயதிலிருந்தே, அதாவது கடந்த 6 வருடங்களாக அவர் குளித்ததை Craig ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

Young girl discovers stepdad secretly filmed her in bath for five year

தந்தை அந்தஸ்தில் பெரும் மதிப்புடன் Craigயை Lauren வைத்திருந்தார். அவர் செய்த இந்த கீழ்த்தரமான செயலை என்னால் சிறிதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என Lauren உருக்கத்துடன் கூறியுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. வளர்ப்புத் தந்தையின் இந்த மோசமான செயல் இங்கிலாந்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young girl discovers stepdad secretly filmed her in bath for five year

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young girl discovers stepdad secretly filmed her in bath for five year | World News.