'ஐடிசி மௌரியா'...'ட்ரம்பிற்காக ரெடியான சாணக்யா'... ஷாக்கிற்கே ஷாக் கொடுக்கும் 'ரூம் வாடகை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியச் சுற்றுப் பயணத்தின்போது தில்லி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு பலவித ஆடம்பர மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஐடிசி மௌரியா’ ஹோட்டலில் தங்குகிறார். அதன் ஒரு நாள் வாடகை தலைசுற்ற வைத்துள்ளது.

முதல்முறையாக இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் வருகை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அவரை வரவேற்கப் பல ஆடம்பரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் உச்சக் கட்ட அளவில் செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப் தங்க இருக்கும் ஐடிசி மௌரியா ஹோட்டல் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்த ஹோட்டலில் மிக முக்கியப் பிரமுகர்களுக்காக வழங்கப்படும் ‘சாணக்யா’ என்ற ஆடம்பர அறையில் அதிபர் ட்ரம்ப் தங்குகிறார். இதற்கு முன், அமெரிக்க முன்னாள் அதிபா்களான ஜிம்மி காா்டா், பில் கிளிண்டன், ஜாா்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா ஆகியோர் இந்தியா வந்தபோது இந்த அறையில் தங்கியது குறிப்பிடத்தக்கது. இரண்டு படுக்கைகள் கொண்ட இந்த அறையானது, பிரத்தியேக வசதிகள் பலவற்றைக் கொண்டுள்ளது. அதிபருக்கு வழங்கப்படும் உணவைச் சோதிக்கும் அதிநவீன ஆய்வுக் கூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா எனப் பல பாதுகாப்பு வசதிகளை அந்த அறை கொண்டுள்ளது.
மேலும் உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்யும், காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பும் இந்த அறையில் உள்ளது. அதிபா் டிரம்ப் தங்குவதையொட்டி, அந்த ஹோட்டலில் பிற நபர்கள் தங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபா் டிரம்ப், அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்காக மட்டுமே அந்த ஹோட்டல் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தனை பாதுகாப்பு வசதிகள் கொண்ட சாணக்யா அறையில் ஒரு இரவு தங்குவதற்குக் கட்டணம் , 8 லட்ச ரூபாய் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
