‘அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு’.. கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ‘ஷாக்’ கொடுத்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு எந்த கட்சிக்கு என்பது குறித்து அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என மக்களிடம் கேள்வி எழுப்பட்டது.
இதில் டிரம்புக்கு ஆதரவாக 41 சதவீத மக்களும், இவரை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக 49 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் டிரம்பை விட 8 புள்ளிகள் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இதற்கு காரணம், அமெரிக்காவில் நடைபெற்று வரும் கறுப்பின மக்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் மற்றும் கொரோனா நடவடிக்கைகளில் டிரம்ப் எடுத்த முடிவுகள் எனக் கூறப்படுகிறது.