'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, அவருடைய வீட்டிலிருந்து 5 டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.
![Mumbai police recover 5 diaries from Sushant Singh Rajput\'s residence Mumbai police recover 5 diaries from Sushant Singh Rajput\'s residence](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/mumbai-police-recover-5-diaries-from-sushant-singh-rajputs-residence.jpg)
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்கடந்த 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மறைவு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 34 வயதே ஆன இளம் நடிகர் ஏன் இந்த முடிவைத் தேடிக் கொண்டார் எனப் பலரது மனதிலும் கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரியுள்ளார்கள்.
தற்கொலைக்கு எதிரான படத்தில் நடித்த ஒருவரே அந்த முடிவைத் தேடிக் கொண்டது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் எனப் பலரும் கூறி வருகிறார்கள். அவர் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும், அதுவே அவருக்குப் பெரிய மன உளைச்சலைக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது வீட்டிலிருந்து 5 டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள். சுஷாந்த்தின் தற்கொலைக்கு முன்பு கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், தற்போது டைரி கைப்பற்றப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில் அவர் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் தற்கொலை என்னும் கொடூர முடிவை எடுக்க எதனால் தள்ளப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)