அகதி முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்துப்போன 7 வயது சிறுமி.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 07, 2022 06:06 PM

பிப்ரவரி 24 ஆம் தேதி,  உலகமே ரஷ்யாவை அச்சத்துடன் பார்த்தது. அந்நாட்டின் பாராளுமன்றத்தில் ரஷ்யாவிற்கு வெளியே ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் கோரி தீர்மானம் ஒன்றை முன்வைத்தார் அதிபர் விளாடிமிர் புதின். பாராளுமன்றமும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, அண்டை நாடான பெலாரசில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களை உக்ரைன் மீது போர் தொடுக்குமாறு உத்தரவிட்டார் புதின்.

Volunteers at a refugee camp celebrated a 7-year-old girl birthday

டீச்சர் அடிக்கிறாங்க என்னன்னு கேளுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்த 3 ஆம் வகுப்பு Cute சிறுவன்..

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான தாக்குதலை தாங்கள் எதிர்கொள்ள போகிறோம் என உக்ரேனியர்கள் தெரிந்துதான் வைத்திருந்தார்கள். விமான நிலையங்கள், துறைமுகங்கள் என ரஷ்ய ராணுவம் உக்ரைனின் உட்கட்டமைப்புகளை அதிரடித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துவருகிறார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து என உலக பெரும் நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு பல பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனால், புதின் விட்டபாடில்லை. அங்குலம் அங்குலமாக உக்ரைனை உருக்குலைத்து வருகிறது ரஷ்ய படை.

வெளியேறும் மக்கள்

ரஷ்ய தாக்குதல் காரணமாக தங்களது வீடுகளை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்து வருகின்றனர் உக்ரைன் பொதுமக்கள். கையில் கிடைத்த பொருட்களுடன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கும் இந்த மக்களிடையே சிறு புன்னகையை வரவழைத்து இருக்கிறது சமீபத்திய வீடியோ ஒன்று.

அந்தச் சிறுமியின் பெயர் அரினா. உக்ரைனை தாயகமாக கொண்ட அரினா தனது பெற்றோர்களுடன் ரோமானியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறாள். அப்போது அவளுடைய கூடாரத்திற்கு வெளியே கூச்சல் கேட்கிறது. துறுதுறு குழந்தையான அரினா உடனே வெளியே வந்து பார்க்கிறாள். மீட்புப்படை அதிகாரிகள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றுகூடி அரினாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுகின்றனர். ஆம். அன்றைய தினம் அரினாவின் 7வது பிறந்தநாள்.

பலூன்கள் காற்றில் ஆட, அதிகாரிகள் வாங்கிவந்த கேக் வெட்டப்படுகிறது. சுற்றி இருந்த அனைவரும் 'ஹேப்பி பர்த்டே' என சந்தோஷமாக பாட, மகிழ்ச்சியில் அந்தக் காட்சியை கண்கொட்டாமல் பார்க்கிறாள் விழா நாயகியான அரினா.

பரிசுகள்

அதன் பிறகு அங்கு வந்திருந்த சிலர், தங்களிடம் இருக்கும் பொருட்களை பரிசாக அரினாவிடம் அளிக்கிறார்கள். புன்னகை மொழி பேசும் அரினா அனைத்து பரிசுகளையும் ஆர்வத்துடன் பெற்றுக்கொள்கிறாள். அகதி முகாமிற்குள் உக்ரேனிய சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

ரொம்ப நேரம் வெய்ட் பண்ண மாற்றுத் திறனாளி ரசிகர்.. வேகமா வந்த கோலி கொடுத்த அசத்தல் கிஃப்ட்.. வைரல் வீடியோ..!

 

Tags : #VOLUNTEERS #REFUGEE CAMP #ROMANIA CELEBRATE #7 YEAR OLD GIRL BIRTHDAY #சிறுமி #அகதி முகாம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Volunteers at a refugee camp celebrated a 7-year-old girl birthday | World News.