தடுப்பூசி கண்டுபுடிச்சிட்டோம் 'பெருமையாக' அறிவித்த நாடு... எங்களோடத 'திருட' பாக்குறாங்க வரிசை கட்டிய நாடுகள்... குவியும் புகார்களால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக ரஷ்யா பெருமையுடன் அறிவிக்க பதிலுக்கு தகவல்களை திருடி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
சில நாட்களுக்கு முன் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவித்தது. இந்த நிலையில் ரஷ்யா தங்களுடைய கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி குறித்த தகவல்களை திருட பார்ப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.
இதேபோல அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது குற்றஞ்சுமத்தி இருக்கின்றன. அதோடு கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்து கொள்ளாது தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இங்கிலாந்து நாட்டில் இருந்து தான் முதலில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புகார்கள் உலக அரங்கில் பெருத்த விவாதங்களை எழுப்பியுள்ளன.