இப்போ தானே 'அவ்ளோ' பேர தூக்குனீங்க?... மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் நிறுவனம்... ஊழியர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > வணிகம்மீண்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலைநீக்கம் செய்து வருகின்றன. சிறிய, பெரிய நிறுவனங்கள் என எந்த சமரசமும் இதில் இல்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் ஒருவித அச்சத்திலேயே ஊழியர்கள் இருக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 350 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா லாக்டவுனால் பிசினஸ் 50% தான் மீண்டு இருக்கிறதாம். இதனால் தான் மறுபடியும் இந்த வேலைநீக்கத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் வரும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம், டிசம்பர் மாதம் வரை ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவை வழங்கப்படும் என ஸ்விக்கி தெரிவித்து உள்ளது. மேலும் இதற்குப்பின் பணிநீக்கம் இருக்காது என்றும் ஆறுதல் அளித்துள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 1100 ஊழியர்களை ஸ்விக்கி பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.