கையெழுத்து போட்ட 'ஈரம்' கூட காயல... இப்டி 'செஞ்சுட்டாங்க' கொந்தளித்த டிரம்ப்... என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா 2-வது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்க போவதில்லை என டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையிலான முட்டல், மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முன்பு சீன வைரஸ் என்று குறிப்பிட்டு வந்த டிரம்ப் தற்போது நேரடியாக சீனாவை தாக்க ஆரம்பித்து இருக்கிறார். பதிலுக்கு சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா 2-வது அலை உருவானால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
நேற்று மெக்ஸிகன் மாகாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய டிரம்ப், '' கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தது. அதனால் தான் நாங்கள் மகிழ்ச்சியை இழந்தோம். அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் நாங்கள் கையெழுத்து போட்டிருந்தோம். அந்த மையின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் இப்படி செய்து விட்டனர். இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்
