'ஆத்தாடி என்ன ஒடம்பி'னு ஆட்டம் போட ரெடியா?.. நம்ம டிக்-டாக் குரூப் மொத்தமும் அங்க தான் கூடியிருக்கு!.. 'பங்கா'வில் பங்கம் செய்யும் இந்தியர்கள்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிக்டாக் தடைக்கு பின் வந்துள்ள இந்தியாவிலேயே தயாரான 'பங்கா' செயலி கடந்த ஒரு வாரத்தில் 1 லட்சம் பயனாளர்களை ஈர்த்துள்ளது.

டிக்டாக் செயலி தடையால் இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் சோர்ந்து போயினர்.
அவர்களை மகிழ்விக்க 'பங்கா' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தயாரான இந்த செயலி, கடந்த 1 வாரத்திற்குள்ளாகவே, 1 லட்சம் பயனாளர்களை பெற்றுள்ளது.
இதில், நம்முடைய முகங்களை கண்டறியும் மற்றும் சிறந்த வடிவமைப்புடனான ரியாலிட்டி தொழில் நுட்பம் ஆகியவை மற்ற செயலிகளில் இருந்து வேறுபட்டு பயனாளர்களை கவருகிறது.
இதேபோன்று, பணம் ஈட்டும் நோக்கிலான பதிவுகளை வெளியிட, பயனாளர்களை தூண்டும் வகையில் பிற செயலிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், 'பங்கா' செயலியில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று பயனாளர்கள் பரிசுகளை அள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதற்காக பல்வேறு ஹேஷ்டேக்குகள் மற்றும் பாடல்களின் பெயரில் தினமும் போட்டிகள் நடத்தப்படும். ரூ.1 லட்சம் வரை பண பரிசுகளும் வழங்கப்படும். பதிவுகளை வெளியிடுவோருக்கு நேரடியாக பணம் வழங்கும் சந்தர்ப்பமும் அமைத்து கொடுக்கப்படுகிறது. முதல் மாதத்தில் ரூ.1 கோடி அளவுக்கு பரிசுக்கான வெகுமதிகளை அளிப்பது என அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
பயனாளர்களின் மதிப்புமிக்க விவரங்களை அந்நிய நாட்டுக்கு, அதுவும் மோதல் போக்கில் உள்ள நாட்டுடன் பகிருவது என்பது அர்த்தமற்றது என இதன் நிறுவனர்கள் நம்புகின்றனர். ஆனால், 'பங்கா' செயலி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, நாட்டின் உள்ளூர்களில் உள்ள செர்வர்களிலேயே அனைத்து விவரங்களும் சேமித்து வைக்கப்படுகின்றன என்பது இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.

மற்ற செய்திகள்
