'என் லவ்வ புரிஞ்சுக்காம அவாய்ட் பண்ணிட்டான்...' '30,000 அடி உயரத்தில விமானம் பறந்துக்கிட்டு இருக்குறப்போ...' காதலி செய்த அதிர்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jun 19, 2020 10:09 AM

காதலன் கண்டுக்கொள்ளாததால் விமானத்தில் நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும்போது சீன பெண் ஒருவர் போதை தலைக்கேறி ஜன்னல் கண்ணாடியை உடைத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

the china woman smashed intoxicated window glasses

சீனாவில் உள்ள லூங் ஏர்லைன்ஸ் விமானத்தில் லி(29) என்ற பெண் பயணம் செய்துள்ளார். போதையில் இருந்த அவர், திடீரென அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலை வேகமாக உடைத்தார். அதனை கண்ட விமான பணியாளர்கள், அதிர்ச்சியடைந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே வேகமாக மத்திய சீனாவின் ஹெனான் தலைநகரில் உள்ள ஜெங்ஜோ சின்ஜெங் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் சைனிங்கிலிருந்து கிழக்கு சீனாவின் கடலோர நகரமான யான்செங்கிற்கு செல்ல இருந்தது. இதுகுபற்றி விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அந்த பெண் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே நிறைய மது குதித்துள்ளார். போதையில் தனது  கட்டுப்பாட்டை இழந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்.

அந்த பெண்ணின் காதலன், அவரது காதலை புரிந்துக்கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார். இதனால் மனமுடைந்து போதையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். அவர் குடித்த மதுபானத்தில் ஆல்கஹாலின் அளவு 35 முதல் 60 சதவீதம் வரை இருந்தது. அதிர்ஷ்டவசமாக, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சம்பவம் நடந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆன நிலையில், தற்போது ‘வெய்போ’ போன்ற பல பிரபல சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், அந்த பெண் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு மனமுடைந்து அழுகிறார். திடீரென கண்ணாடி ஜன்னலை தன் கையாலே தாக்கி உடைக்கிறார்.  பதற்றமடைந்த மற்ற பயணிகள் அந்த பெண்ணை தடுத்து அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர். உடனே விமானம் தரையிறக்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The china woman smashed intoxicated window glasses | World News.