"என் செலவுக்கே சம்பாதிக்க முடியாம இருந்தேன், அப்போதான்"... 'மிரளவைத்த ஆட்டத்திற்குபின்'... 'EMOTIONAL ஆன தமிழக வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி அசத்தியுள்ளது.
அபு தாபியில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு ஒருபுறம் மிகப்பெரிய இலக்கை வகுத்துக் கொடுத்த சுனில் நரைன், நிதிஷ் ராணா பேட்டிங் காரணமெனில், மறுபுறம் மிரளவைத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சும் மிக முக்கியமான காரணமாகும்.
அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்த வருண் 5 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருதும் பெற்றுள்ளார். 95 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 40 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. தன் கட்டுக்கோப்பான சுழற்பந்துவீச்சால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள வருண், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார்.
இதையடுத்து போட்டிக்குப்பின் பேசிய வருண் சக்ரவர்த்தி, "நான் கட்டிடக் கலை வல்லுநருக்காகப் படித்தேன். ஆனால் அந்தப் படிப்பை வைத்து என் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் அளவுக்குகூட என்னால் சம்பாதிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு பணப்பிரச்சினை இருந்தது. 2015ஆம் ஆண்டுவரை பணப்பிரச்சினையோடுதான் இருந்தேன்.
பின்னரே ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து கிரிக்கெட் பக்கம் என் வாழ்க்கையைத் திருப்பினேன். இந்த நேரத்தில் நான் என் அம்மா ஹேமா மாலினி, அப்பா வினோத் சக்ரவர்த்தி, நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் நேகா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் தான் அப்போது என் மனதுக்கு தெம்பு அளித்தவர்கள்.
கடந்த சில போட்டிகளாக விக்கெட் எடுக்கமுடியாமல் மன உளைச்சலில் இருந்த நான் இந்த ஆட்டத்தில் ஒன்று அல்லது 2 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என எண்ணியபோது, எனக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதிலும் ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டை நான் வீழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் ஷார்ட் பவுண்டரி அடிக்கும் வகையில் ஸ்டெம்ப்புக்கு அளவாகப் பந்துவீசினேன் அது அவரின் விக்கெட்டைச் சாய்த்தது" எனத் தெரிவித்துள்ளார்.