'எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்பியாச்சு...' 'புதுசா யாருக்குமே பாசிடிவ் இல்ல...' - தமிழகத்தில் கொரோனா இல்லாத 'இரு' மாவட்டங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் இரு மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களா மாறியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் வைரஸ் பரவும் எண்ணிக்கை கணிதத்தை விட கூடுதலாகவே இருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், தமிழக அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாகவும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
இதற்கு மாபெரும் முக்கியகாரணமாக பார்க்கப்படுவது மக்களே கொரோனா வைரஸ் வீரியம் அறிந்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றி வந்ததும் தற்போது கொரோனா எண்ணிக்கை குறைய முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் இரு மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளது.
அதாவது அரியலூர், பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்கள் மட்டும் தான் தற்போது, கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 456 பேர், குணம் அடைந்து வீடு திரும்பினர். குறிப்பாக தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட உயிரிழக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.