உக்ரைனில் இருந்து லைவ் வீடியோ.. என்னது அது தலைக்கு மேல?.. ஒரு நொடி ஆடிப்போன பத்திரிக்கையாளர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் உக்ரைனில் நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது தலைக்கு மேலே சூப்பர்சோனிக் ஏவுகணை பறந்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Supersonic missile flying over journalist head in Ukraine Supersonic missile flying over journalist head in Ukraine](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/supersonic-missile-flying-over-journalist-head-in-ukraine.jpg)
உக்ரைன்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ என்ற அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக உரசல் இருந்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை ரஷ்யா சமீபத்தில் குவித்தது. அதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
ரஷ்யா
இந்த நிலையில் போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா அமைப்பு வேண்டுகோள் வைத்தது. இதனிடையே உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். அதேவேளையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஏவுகணை தாக்குதல்
அதிபர் புதினின் அறிக்கைக்குப் பிறகு, உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் பல நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
பத்திரிகையாளர்
இந்த சூழலில் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரான பிரையன் வில்சன் உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து போர் நிலவரம் குறித்து தனது நேரடி ஒளிபரப்பை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்றது. இதைப் பார்த்த பத்திரிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Video absolutamente loco de los periodistas @brycewilsonau en #Kramatorsk, #Ucrania. #UkraineRussiaCrisis pic.twitter.com/simh7UKL5e
— Wojtek | 🕯️19 de marzo🕯️ (@Anne__Boonchuy) February 24, 2022
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)