புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 85 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் லண்டனில் உள்ள கிங் கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகமானோர் புகை பிடிப்பவர்களாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் புகை பிடிப்பவர்களிடம் அதிகம் காணப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகை பிடிப்பவர்களுக்கு வாசனை இழப்பு, உணவை தவிர்ப்பது, வயிற்றுப்போக்கு, சோர்வு, குழப்பம், தசை வலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உபாதைகள் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.