இலங்கை அதிபர் மாளிகையில்.. பீரோ பின்னாடி இருந்த வழி.. "லிஃப்ட் வசதி வேற இருக்கா..?" - மிரண்டு போன போராட்டக்காரர்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கான பொருளாதார நெருக்கடியை சுமார் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை தற்போது சந்தித்து வருகிறது.
Also Read | இலங்கை அதிபர் மாளிகைல இருந்த ரகசிய அறை.. கத்தை கத்தையா பணத்தை பார்த்து திகைச்சு போன போராட்டக்காரர்கள்..!
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது.
இதன் காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
வெடித்த போராட்டம்
ஆனாலும், சிக்கல் தீரவில்லை என்பதால், அரசுக்கு எதிராக மக்கள் கடந்த பல நாட்களாகவே தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்கு நடுவே, பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதன் காரணமாக, பல கிலோ மீட்டர்களுக்கு கையில் கேனுடன் மக்கள் காத்திருந்த புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடையவே, இலங்கை தலைநகர் கொழும்பு-வில் இருக்கும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சமீபத்தில் முற்றுகையிட்டனர். மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், உள்ளே இருக்கும் அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை ஆக்ரமித்து வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள்
மேலும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள ரகசிய அறையில் இருந்து, பணத்தை எடுத்த விஷயமும் பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
உள்ளே இருந்த பதுங்கு குழி?
இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மாளிகைக்குள் அலமாரி ஒன்றின் பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, இணையத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலமாரிக்கு பின், அடித்தளத்திற்கு செல்ல வழி ஒன்று உள்ளது. அதே போல, லிஃப்ட் மூலம் அடித்தளம் செல்லும் வகையிலும் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், அங்கிருந்த போராட்டக்காரர்களால், பதுங்கு குழியின் கனமான கதவை திறந்து உள்ளே செல்ல முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
Also Read | "அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியில் இருந்து OPS நீக்கம்!".. பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானம்..!