பெட்ரோல் வாங்க 5 நாள் கியூ..அடுத்தடுத்து நிகழும் துயரம்.. இலங்கையின் தற்போதைய நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jun 24, 2022 12:39 PM

இலங்கையில் பெட்ரோல் பங்க் வாசலில் 5 நாட்களாக எரிபொருள் வாங்க காத்திருந்த 63 வயது லாரி ஓட்டுநர் மரணம் அடைந்திருப்பது இலங்கை மக்களிடையே மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Truck driver dies after waiting for 5 days for fuel in Sri Lanka

Also Read | பெரும் சோகம்.! அறுவை சிகிச்சை செய்த 5வது நாளில் அதிர்ச்சி.. Ex அழகிக்கு பின்னர் நேர்ந்த துயரம்.. !

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் மேற்கு மாகாணத்தில் 63 வயதான லாரி ஓட்டுனர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசல் வாங்க வரிசையில் நின்றிருந்திருக்கிறார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதன் மூலம் எரிபொருள் வாங்க வரிசையில் நின்று மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.

இப்படி உயிரிழந்தவர்கள் 43 முதல் 84 வகைகளுக்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு இயந்திரமே பழுதடைந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து துறை ஊழியர்களை வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. அடுத்த மூன்று மாதத்திற்கு இத்திட்டம் அமலில் இருக்கும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Truck driver dies after waiting for 5 days for fuel in Sri Lanka

மேலும் போக்குவரத்து தட்டுப்பாடு இருப்பதால் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளை வெள்ளிக்கிழமை தோறும் வேளாண்மைப் பணிகளில் ஈடுபடுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. உணவுப் பொருள் தட்டுப்பாடு இலங்கையை பாதித்து வரும் நிலையில் இந்த முடிவினை அரசு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வலியுறுத்தல்

இந்நிலையில், முல்லைத்தீவு, விஸ்வமடுவில் எரிபொருளுக்காக வரிசையில் நின்றிருந்த மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மக்களின் சிரமங்களை புரிந்துகொள்ள வேண்டும் என இலங்கை அரசுக்கு ஐநா வலியுறுத்தியுள்ளது.

மின்சார பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இலங்கையில் தங்களது தொழில்களை நிறுத்திவிட்டன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்க இலங்கை அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

Also Read | 60-வது பிறந்தநாளுக்கு 60 ஆயிரம் கோடி நன்கொடை.. கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வந்த அதானி.. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!

Tags : #SRI LANKA #TRUCK DRIVER #FUEL #SRI LANKA ECONOMIC CRISIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Truck driver dies after waiting for 5 days for fuel in Sri Lanka | World News.