'1 கோடி' பேரு வேலை பார்த்துட்டு இருந்தோம்... ஏற்கனவே '20 லட்சம்' பேருக்கு வேலை போச்சு... இன்னும் 30 லட்சம் பேருக்கு 'இந்த' நெலமை வரலாம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்1 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மேலும் தொழில் நிறுவனங்கள், சிறு-குறு நிறுவனங்கள் என அனைத்தும் மொத்தமாக முடங்கி போய் உள்ளன.
இந்த நிலையில் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான கூட்டமைப்பு (பி.ஓ.சி.ஐ) வெளியிட்டுள்ள செய்தியில், 15 லட்சம் அளவிற்கு தனியார் பேருந்துகள், மேக்சி கேப்கள் மற்றும் 11 லட்சம் சுற்றுலா டாக்சிகள் எங்களுடைய கூட்டமைப்பு சார்பில் இயங்கி வந்தன. இதனால் 1 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா டாக்சி தொழிலில் ஈடுபட்டு வந்த 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். எங்களது கூட்டமைப்பினருக்கு அரசின் ஆதரவு தேவையாக உள்ளது. எங்களில் பலர் இந்த தொழிலை விட்டு விட்டு செல்ல கூடிய சூழலில் உள்ளனர். அதனால் அவர்களது வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
