சைலண்டாக இருந்து... சாதித்துக்காட்டிய தமிழகம்!.. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' மொமண்ட்!.. வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துக்கு விலங்குகளில் பரிசோதனை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு விலங்குகளுக்கு பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது.
இதை தொடர்ந்து, அதற்கான ஆராய்ச்சிகள் பரிசோதனைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. உலக அளவில் 196 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில், 42 ஆராய்ச்சிகளில் மனித சோதனை செய்யும் அளவிற்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையமும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜூன் மாதம் முதல் ஈடுபட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர் முதற்கட்டமாக பிரீ கிளினிக்கல் ட்ரயல் என்று சொல்லக்கூடிய விலங்குகளிடம் அந்த மருந்தை பரிசோதனை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சிறு விலங்கினங்கள் ஆன முயல், எலி போன்ற விலங்குகளிடம் இந்த மருந்து பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மனிதர்களிடம் இந்த மருந்து சோதனை செய்ய அனுமதி பெறப்படும்.
அதே போன்று இந்தியாவில் தயாராகியுள்ள மற்றொரு கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் சோதனை தற்போது இரண்டாம் கட்ட மனித சோதனை முடியும் தருவாயில் உள்ளது.
அதேபோன்று லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோஷூல்ட் தடுப்பூசி சோதனையும் இந்தியாவில் இரண்டாம் கட்ட சோதனை முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து மருத்துவ ஆராய்ச்சிகளும் முடிய அடுத்த ஆண்டு முதல் பாதி வரை ஆகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்கின்றனர்.