‘கையிலே ஆகாசம்.. கொண்டு வந்த உன் பாசம்!’... சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை எடுத்த தமிழக வீரர் நடராஜன்!.. வீட்டில் இருந்தே ‘ஆரத்தி’ எடுத்த தாய்!... நெகிழும் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகான்பெர்ராவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணியில் இந்தியாவுக்காக தனது முதல் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆடி வருகிறார். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தொடங்கியது.
இப்போட்டியில் வார்னர் காயம் காரணமாக விலக, கேப்டன் ஆரோன் ஃபின்சும், லபுஷேனும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பும்ராவும், நடராஜனும் இந்திய அணிக்காக பந்து வீச, நடராஜன் ஆஸ்திரேலிய நட்சத்திர ஆட்டக்காரராக மர்னஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடங்கி, தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வரும் நடராஜனுக்கு பலரும் டிவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது விக்கெட் வீழ்த்திய நடராஜனுக்கு தொலைக்காட்சியில் அவரது தாயார் ஆரத்தி எடுத்துள்ளார். மேலும் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நெடுமாறன் கதாபாத்திரம் இறுதியில் வென்றதும், வருடன் பாடலுடன் நடராஜனின் வெற்றியை ஒப்பிட்டு இணையவாசிகள் பகிர்ந்து தங்களது நெகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
சூரரைப் போற்று படத்தில் நெடுமாறன் ஜெயிச்ச அப்ப இந்த பாடல் மனம் நெகிழ வைத்தது தற்போது நிஜ வாழ்க்கையில் நடராஜன் வெற்றி பார்த்து அவங்க அம்மா ஆரத்தி எடுக்குறத பார்க்கும் போது இன்னும் நெகிழ்ச்சியா உள்ளது @Natarajan_91#INDvsAUS
— Nirmal kumar 💥SFC💥 (@Nirmal_twetz) December 2, 2020
சேலம் மாவட்டம் சின்னப்பட்டி என்கிற கிராமத்தில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனை அவரது ஊர்க்காரர்கள் தொடங்கி, தமிழக முதல்வர், துணை முதல்வர் என அனைவருமே பாராட்டி வருகின்றனர். அவரது ஊர்க்காரர்கள் இதனால் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.