புதின் தலைக்கு விலை.. ரஷ்ய தொழிலதிபர் செய்த காரியம்..என்ன நடக்கப்போகுதோ..?
முகப்பு > செய்திகள் > உலகம்நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதனை அடுத்து பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதனை அடுத்து மிக மோசமான தாக்குதல் ஒன்றினை உக்ரைன் சந்தித்து வருகிறது.

புது ரெக்கார்டு படைக்க போகும் கோலி & AB டிவில்லியர்ஸ்.. நட்பின் இன்னொரு மைல்கல்..!
புதின் மீது கோபம்
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக உலக தலைவர்கள் பலரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கண்டித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசி இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்," இந்தப் போரினால் நிகழும் அனைத்து விளைவுகளுக்கும் ரஷ்யாவே முழு பொறுப்பு" என்றார். அதேபோல, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்றோரும் ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், அதிபர் புதினை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் அலெக்ஸ் கொனானிகின் சமூக ஊடக தளமான LinkedIn இல் அவர் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில் "ரஷ்ய தாக்குதலை கண்டிப்பதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பது எனது தார்மீக கடமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
1 மில்லியன்
மேலும், அந்தப் பதிவில்,"ரஷ்ய மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் புடினை போர்க் குற்றவாளியாகக் கைது செய்யும் அதிகாரிகளுக்கு $1,000,000 செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதின் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் தனது எதிரிகளை கொலை செய்ய அதிகாரத்தை பயன்படுத்துவதாகவும் அலெக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், உயிருடனோ, உயிரிற்ற நிலையிலோ புதினை ஒப்படைப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"உண்மையான ரஷ்ய குடிமகனாக நாஜி கருத்தியலை எதிர்த்து போராடுவேன். உக்ரைனுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகமே, ரஷ்யாவின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தாலும் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரே விளாடிமிர் புதினின் தலைக்கு விலை குறித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
