'உங்க தடுப்பூசியை நாங்க தயாரிக்கிறோம்...' 'WHO ஒப்புதல்-லாம் முக்கியம் இல்லன்னு...' - முதல் ஆளா ரஷ்யாவிடம் டீல் பேசிய நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா கண்டறிந்துள்ள ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை பிரேசில் தயாரிக்க அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது.

உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை துவம்சம் செய்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு கடந்த சில நாட்கள் முன்னர் ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருந்தது. மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் ஸ்புட்னிக் 2 தடுப்பு மருந்தை ரஷ்யா தங்கள் நாட்டு மக்களுக்கு உபயோகப்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளது.
ஆனால் இந்த ஸ்புட்னிக் -5 மருந்து உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 மருந்தை பிரேசில் மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் தயாரிக்கவும் விநியோகிப்பதற்காகவும் ரஷ்யாவுடன் டெக்பார் என்ற பிரேசில் தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது.
மேலும் டெக்பார் நிறுவனம் இதுகுறித்து கூறும்போது, பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டளார் அனுமதி வழங்கினால் கொரோனா தடுப்பூசிக்கான 3-ம் கட்ட பரிசோதனையில் ரஷ்யாவுடன் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது,

மற்ற செய்திகள்
