'அட போங்கப்பா... நீங்களும் உங்க கொரோனாவும்!.. இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா'?.. நிறுவனங்களின் 'அதிரடி' முடிவால்... திகைத்துப் போன ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா லாக்டவுன் காரணத்தால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளையும், காலிப்பணியிடங்களையும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவில், பணியமர்த்தல் (hiring) 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
உணவகங்கள், ஹோட்டல் விடுதிகள், விமான சேவைகள் ஆகிய துறைகள் கடுமையான நெருக்கடியில் இருந்த வந்த சூழலில், தற்போது அவை மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, ஐடி சார்ந்த சேவை பணிகளும் 42 விழுக்காடு குறைந்திருந்தன.
இந்நிலையில், கட்டிடத் தொடழில் 27 விழுக்காடு, மீடியா 36 விழுக்காடு, என்ற அளவில் hiring பணிகள் ஜூன் மாதம் அதிகரித்தது.
மேலும், வங்கித்துறையில் 16 விழுக்காடு, ஆட்டோமொபைல் துறை 14 விழுக்காடு, தகவல் தொழில்நுட்பம் 13 விழுக்காடு, ஐடி (Hardware) 9 விழுக்காடு அளவிலான hiring பணிகளை தற்போது வேகப்படுத்தியுள்ளன.
சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்தாலும், தற்போது அவை மீண்டு வருவதால் மீண்டும் புதிய வேலைவாய்ப்புகள் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், 'ஜூலை 2020' மாதம் குறிப்படத்தகுந்த மாற்றத்தினை வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்தி இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
