பரிசோதனையில் கிடைத்த 'சூப்பர்' ரிசல்ட்... புதிய மைல்கல்லை எட்டிய 'கோவாக்சின்'... பொது பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் கோவாக்சின் மனித பரிசோதனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. உச்சகட்டமாக ரஷ்யா முதல் தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து உள்ளது. ஆனால் மனித பரிசோதனையை முழுவதுமாக முடிக்காமல் ரஷ்யா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கி விட்டதாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் உருவாகி இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி மனித பரிசோதனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. 2-வது முறையாக 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதில் 32 பேருக்கு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளது. கோவாக்சின் சோதனையில் இது ஒரு புதிய மைல்கல்லாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது.
இதனால் கோவாக்சின் விரைவில் இந்தியா முழுவதும் பொது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.