'சாப்பிட்டது இந்த இறைச்சியைத் தான்'... 'சீனாவுக்கு வந்த சோதனை'... 'அண்டை நாட்டிலிருந்து பரவும் புதிய நோய்'... பலியான முதல் நபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவிற்கு இன்னும் தடுப்பு மருந்து தயாராகாத நிலையில், சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் இருந்து புதிய நோய் பரவ ஆரம்பித்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா நோய் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதனால் உலகத்தின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீள்வதற்காக உலக நாடுகள் போராடி வருகிறது. இந்தச்சூழ்நிலையில் சீனா மற்றும் அதன் அண்டை நாடான மங்கோலியாவில் பரவி வரும் புபோனிக் பிளேக் நோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புபோனிக் பிளேக் நோயானது பாக்டீரிய நோயாகும். இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்துத் தின்னும் உயிரினங்களால் பரவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நோய்க்கு உரியச் சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்பதாகும். இதனால் சீனா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் 1-ந்தேதி மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் இரண்டு பேருக்கு புபோனிக் பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மர்மோட் இறைச்சியைச் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார்கள். இதனால் மக்கள் அனைவரும் அந்த இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் 15-ந் தேதி அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மாகாணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் புபோனிக் பிளேக் நோயால் உயிரிழந்தான். இந்த நிலையில் மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
பலியான நபருக்கு 42 வயதாகும் நிலையில், அவருக்கு புபோனிக் பிளேக் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அந்த நபருடன் தொடர்பிலிருந்த அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மங்கோலிய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது புதிதாகப் பரவ ஆரம்பித்துள்ள இந்த நோய் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.