‘எரிமலை வெடித்ததில் 23 அடி ஆழத்தில் புதைந்து அழிந்துபோன நகரம்!’.. ‘கழுகுப் பார்வையில் வெளிவந்த வீடியோ’!!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் பல வருடங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறிய எரிமலையால் ஒரு நகரமே அழிந்து போனது.
இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியில், கி.பி 79-ஆம் ஆண்டு, எரிமலை வெடித்துச் சிதறியதில் அழிந்துபோன பொம்பெயி நகரத்தின் ஜோன் வீடியோ தற்போது வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எரிமலைக் குழம்பு மற்றும் சாம்பலால் அந்த நகரம் 23 அடி ஆழத்தில் புதைந்து போனதை அடுத்து அந்த நகரம் பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
பின்னர் 1749-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போதுதான் பொம்பெயி நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஈர்ப்பதற்காக இந்த நகரத்தின் கழுப்பார்வையில் எடுக்கப்பட்ட வீடியோவை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.