வெளியான ராணி எலிசபெத் இறப்பு சான்றிதழ்.. "மரண நேரத்துல நடந்த நெறய ரகசியம் இப்ப உடைஞ்சு இருக்கு"
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு, உடல்நலக் குறைவு காரணமாக, தனது 96 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
Also Read | "விராட் கோலிக்கே அதான் நிலைமை".. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சொன்ன முக்கிய தகவல்!!
70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத் உடல், அரச முறைப்படி பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்ட பின்னர், கடந்த 19 ஆம் தேதியன்று நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
அவ்வப்போது ராணி எலிசபெத் மற்றும் அரச குடும்பம் தொடர்பான பல அரிய தகவல்கள் இணையத்தில் அதிகம் வலம் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், தற்போது ராணி எலிசபெத் இறப்பு சான்றிதழ் வெளியாகி உள்ளதால், அதிலுள்ள விஷயங்கள் தற்போது ஏராளமான கருத்துக்களை சம்பாதித்து வருகிறது. ராணி எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதியம் சுமார் 3 : 10 மணியளவில், ராணி உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வயது காரணமாக தான் மரணமடைந்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தின் அடிப்படையில், ராணி உயிரிழந்த சமயத்தில் அவருடன் யார் இருந்தனர் என்பது பற்றியும், அதற்கு முன்பாக யார் எல்லாம் அவரை சந்தித்தார்கள் என்பது பற்றிய விவரமும் தெரிய வந்துள்ளது. இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகியோர் விமானம் ஒன்றில் ஏறி, ராணி எலிசபெத் மறைவதற்கு முன் அவரை பார்ப்பதற்காக புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மறுபக்கம், தனி விமானம் ஒன்றில் இளவரசர் ஹாரியும் கிளம்பியதாக கூறப்படுகிறது. முன்னதாக, இளவரசர் ஹாரி மட்டும் தான் ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகே பால்மோரல் வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது ராணி எலிசபெத் இறப்பு சான்றிதழில் மரண நேரம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தின் படி, இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாருமே ராணி இறப்பதற்கு முன் அவரை பார்க்கவில்லை என்று தான் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், ராணியின் குடும்பத்திலுள்ள பெரும்பாலானோர், ராணி இறப்பதற்கு முன்பு அவரை உயிருடன் பார்க்கவில்லை என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. மேலும், மன்னர் சார்லஸ், அவரது சகோதரி அன்னே ஆகியோர் தான் பால்மோரலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, ராணி எலிசபெத் மறைவு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கூட அவர் உயிரிழந்து மூன்று மணி நேரம் கழித்து அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க".. தமிழ் வசனத்துக்கு Lip Sync செஞ்ச ஷிகர் தவான்.. வைரல் வீடியோ!!