பழைய சுவத்துக்குள்ள புதைக்கப்பட்ட பர்ஸ்.. உள்ளே இருந்த ரகசிய கடிதம்.. 62 வருஷத்துக்கு அப்பறம் வெளிவந்த ஆச்சர்யம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பர்ஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்த பொருட்களை பார்த்து உரிமையாளர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.

பள்ளி
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 1950 களில் லீக் சிட்டி ஸ்கூல் (League City School) எனும் பள்ளி செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த பள்ளி இருந்த இடத்தை தற்போது League City Historical Society மற்றும் Clear Creek Independent School District ஆகியவை பராமரித்து வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பள்ளியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில், பள்ளியில் இருந்த சுவர்களை பணியாளர்கள் அகற்றும் போது உள்ளே வித்தியாசமான பொருட்கள் இருப்பதை பார்த்திருக்கின்றனர்.
அந்த சுவற்றுக்குள் பழைய பர்ஸ் ஒன்று இருந்திருக்கிறது. சிதலமடைந்த நிலையில் இருந்த அந்த பர்ஸ்-ஐ பிரித்துப் பார்த்த போது பணியாளர்கள் ஆச்சர்யப்பட்டு போயிருக்கின்றனர். காரணம், அதற்குள் பழைய புகைப்படங்கள், டைரி, காலண்டர், கைக்குட்டை ஆகியவை பத்திரமாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
புகைப்படங்கள்
இதுகுறித்து பேசிய League City Historical Society-யின் துணை தலைவர் ரிச்சர்ட் லூயிஸ்,"அதை பார்க்க பர்ஸ் போலவே இருந்தது. ஆனால், அதற்குள் டைரி ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெவர்லி வில்லியம்ஸ் (Beverly Williams) என்பவருக்கு சொந்தமான பர்ஸ் அது. அதில் அவருடைய பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது. அந்த புகைப்படங்கள் 60 - 70 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை. நாங்கள் உடனடியாக வில்லியம்ஸ்-ன் தற்போதைய முகவரியை தேட துவங்கினோம்" என்றார்.
இந்நிலையில், வில்லியம்ஸின் விபரங்களை பள்ளி நிர்வாகத்தினர் தேடி கண்டுபிடித்திருக்கின்றனர். அப்போது அவர் 1950களில் இந்த பள்ளியில் படித்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அவருடைய மகளை கண்டுபிடித்து விஷயத்தை தெரிவித்திருக்கின்றனர் அதிகாரிகள். இதனால் ஆச்சர்யப்பட்டுப்போன அவர், தனது தந்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மரணமடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதனுடன் ஒரு காதல் கடிதமும் பர்ஸுடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தனது முறிந்துபோன காதல் குறித்து மாணவி ஒருவர் அதனை எழுதியிருக்கிறார். இந்நிலையில், இந்த அரிய பொருட்களை உரியவர்களிடம் சேர்க்கும் பணிகளில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள்.

மற்ற செய்திகள்
