இது என்னடா காதுக்குள்ள இருந்து சத்தம் எல்லாம் வருது??.. அவதிப்பட்ட நபர்.. என்னன்னு செக் பண்ணி பாத்தப்போ தூக்கி வாரி போட்ருச்சு
முகப்பு > செய்திகள் > உலகம்ஆக்லாந்து : காதுக்குள் மூன்று நாட்களாக ஏதோ குடைந்து கொண்டிருந்த நிலையில், தூக்கத்தை தொலைத்த நபருக்கு கடைசியில் அதிர்ச்சி சேதி ஒன்று கிடைத்துள்ளது.

பொதுவாக, ஒரு மனிதரின் காதுக்குள் தண்ணீர் அல்லது ஏதேனும் நுழைந்து விட்டால், திடீரென செவி கேட்காதது போல தோன்றும்.
ஏதோ ஒன்று, நமது காதில் அடைத்து, அதன் மூலம் நாம் பேசுவது எதிரொலிப்பது போலவும் இருக்கும். அப்படி ஒருவருக்கு நடந்து, கடைசியில் சற்று திகைப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு செய்தி பற்றி தான், நாம் தற்போது பார்க்கப் போகிறோம்.
அடைத்துக் கொண்ட காது
நியூசிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாந்து என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சேன் வெட்டிங் (Zane Wedding). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நீச்சலடித்து குளித்துள்ளார். அதன் பிறகு இருந்து, அவரது காதுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டு இருந்தது போல தோன்றியுள்ளது. இதன் காரணமாக, அவர் தூக்கம் இல்லாமலும், சரிவர காது கேட்காமலும், அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏதோ தப்பா இருக்கு
இதனைத் தொடர்ந்து, தான் குளித்த போது, தண்ணீர் காதிற்குள் சென்றிருக்கக் கூடும் என அவர் எண்ணியுள்ளார். ஆனால், அவர் அசையாமல், வெறுமென உட்கார்ந்து இருக்கும் சமயத்தில் கூட, அவரது காதில் ஏதோ நகர்ந்து கொண்டே இருப்பதையும் உணர்ந்துள்ளார். இதனால், ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த சேன், மருத்துவரின் உதவியை நாடியுள்ளார்.
முயன்றும் பலனில்லை
இதனையடுத்து, சேனிற்கு மருந்துகளை அளித்த மருத்துவர், ஹேர் டிரையர் மூலம், அவரது காதை உலர வைத்து முயற்சி செய்து பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த ஆலோசனை, சேனிற்கு பலன் கொடுக்கவில்லை. தொடர்ந்து, இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமலும், காதில் ஏதோ ஒன்று குடையும் சத்தம் கேட்டும், கடுமையாக அவதிப்பட்டுள்ளார் சேன்.
காத்திருந்த அதிர்ச்சி
இறுதியில், காது நிபுணரிடம் செல்ல முடிவெடுத்துள்ளார் சேன். முதலில் அவரை பரிசோதித்த நிபுணர், அவருக்கு காதில் கட்டி எதுவும் உருவாகியிருக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால், காதை சோதனை செய்து பார்த்த பிறகு, மருத்துவருக்கே அதிர்ச்சி காத்திருந்தது.
அதிர்வை உணர்ந்தேன்
காதினை உற்று நோக்கிய மருத்துவர், அதற்குள் பூச்சி போல ஒன்று, நெளிந்து போவதைக் கண்டுள்ளார். அதனைக் கண்டதும், கரப்பான்பூச்சி ஒன்று இருக்கிறது என கூறவே, அதைக் கேட்டதும், இருந்த இடத்தில் இருந்து, அதிர்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார் சேன். அதன் பிறகு, உறிஞ்சு எடுக்கும் கருவி ஒன்றைக் கண்டு, மெல்ல மெல்ல அதனை வெளியேற்றியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக, தெளிவாக காது கேட்காமல் அவதிப்பட்டு வந்த சேன், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளார். தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றிப் பேசிய அவர், 'கரப்பான் பூச்சியை காதிற்குள் இருந்து எடுக்கும் போது, எனது செவி முழுவதும் அதிர்வதைப் போலவே நான் உணர்ந்தேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
