விமான நிலையத்தில் வெடிகுண்டு!.. பிரதமருக்கு வந்த 'மர்ம பார்சல்'!.. பிரிச்சு பார்த்தா... உயிரை கையில் பிடித்து நடுங்கும் பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் தாக்குதல் நடத்தியதன் பரபரப்பு அடங்குவதற்குள், தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்ட ஒரு மர்ம பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, அவர் இருந்த இடத்திற்கு கீழே, எட்டாவது மாடியில் பணியாற்றும் ஒருவர் அந்த பார்சலை வாங்கியுள்ளார்.
அந்த பார்சலில் வெள்ளை நிறப் பொடி ஒன்று இருக்கவே, உடனடியாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று சிறப்புக் குழுக்கள் களத்தில் இறங்கி, கண்டெடுக்கப்பட்ட பார்சல் தொடர்பாக ஆய்வில் இறங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் இலங்கையர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, கிறிஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது, பிரதமருக்கே மர்ம பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து இதுபோன்ற மர்மங்கள் நடைபெற்று வருவதால், நியூசிலாந்து பெரும் பரபரப்பில் உள்ளது.

மற்ற செய்திகள்
